×

திண்டிவனம் அருகே உதவி தலைமை ஆசிரியர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை!

விழுப்புரம் திண்டிவனம் அருகே உதவி தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள மானூரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் எண்டியூர் அரசு பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நாகம்மாள். அரசுப்பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று ஜெயப்பிரகாஷ், அவரது மனைவி நாகம்மாள் ஆகியோர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு
 

விழுப்புரம்

திண்டிவனம் அருகே உதவி தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள மானூரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் எண்டியூர் அரசு பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நாகம்மாள். அரசுப்பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று ஜெயப்பிரகாஷ், அவரது மனைவி நாகம்மாள் ஆகியோர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு புறப்பட்டு சென்றனர்.

மாலையில் பணிமுடிந்து ஜெயப்பிரகாஷ் வந்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, வீட்டில் இருந்த பீரோவை மர்மநபர்கள் உடைத்து, அதில் வைத்திருந்த 35 சவரன் தங்க நகைகள் மற்றும் 750 கிராம் வெள்ளிப் பொருட்களை திருடி சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து அவர், பிரம்மதேசம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், கொள்ளை சம்பவம் குறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசுப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.