×

மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில், 2 இளைஞர்கள் பலி!

ராமநாதபுரம் ராமநாதபுரம் அருகே மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ராமநாதபுரம் அல்லிகண்மாய் பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். அதே பகுதியில் உள்ள, ஈசா பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் கார்த்திக். நண்பர்களான இருவரும் நேற்று மண்டபம் அருகேயுள்ள தேர்போகியில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சென்றனர். சுவாமி தரிசனத்திற்கு பின்னர் இருவரும் இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரத்துக்கு திரும்பி கொண்டிருந்தனர். இந்த நிலையில், கோயில்வாடி பகுதியில் வளைவில் திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை
 

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராமநாதபுரம் அல்லிகண்மாய் பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். அதே பகுதியில் உள்ள, ஈசா பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் கார்த்திக். நண்பர்களான இருவரும் நேற்று மண்டபம் அருகேயுள்ள தேர்போகியில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சென்றனர். சுவாமி தரிசனத்திற்கு பின்னர் இருவரும் இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரத்துக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், கோயில்வாடி பகுதியில் வளைவில் திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் மற்றும் கார்த்திக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த தேவிப்பட்டினம் போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.