×

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கற்கள், பாட்டில்களை வீசி தாக்குதல்

ராமநாதபுரம் இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்ததாக கூறி ராமேஸ்வரம் மீன்வர்கள் மீது, அந்நாட்டு கடற்படையினர் கற்கள் மற்றும் பாட்டில்களை கொண்டு தாக்கியதில் 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளின் கண்ணாடிகள் உடைந்தன. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று சுமார் 566 விசைப்படகுகy ளில், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த நிலையில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி, ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகள் மீது, அந்தநாட்டு கடற்படையினர் கற்கள் மற்றும் பாட்டில்களை கொண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
 

ராமநாதபுரம்

இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்ததாக கூறி ராமேஸ்வரம் மீன்வர்கள் மீது, அந்நாட்டு கடற்படையினர் கற்கள் மற்றும் பாட்டில்களை கொண்டு தாக்கியதில் 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளின் கண்ணாடிகள் உடைந்தன. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று சுமார் 566 விசைப்படகுகy ளில், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த நிலையில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி, ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகள் மீது, அந்தநாட்டு கடற்படையினர் கற்கள் மற்றும் பாட்டில்களை கொண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.

மேலும், மீன்பிடி வலையை அறுத்து அதில் இருந்த இரும்பு குண்டுகளை கொண்டும் அவர்கள் தாக்கினர். இந்த சம்பவத்தில் 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளின் கண்ணாடிகள் சேதம் அடைந்தன. தாக்குதல் சம்பவம் காரணமாக கரை திரும்பிய மீனவர்கள் பேசுகையில், இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல் காரணமாக பகல் நேரங்களில் மீன்பிடிக்க முடியவில்லை என்றும், இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும் வேதனை தெரிவித்தனர். இந்த நிலையில், இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து இந்திய மீனவர்கள், தங்களின் கடல்வளங்களை அழித்து வருவதாகவும், அதனை கடற்படை வேடிக்கை பார்ப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.