×

பாம்பனில் விற்பனை செய்வதற்காக பதுக்கிய 1,500 மதுபாட்டில்கள் பறிமுதல்

ராமநாதபுரம் பாம்பனில் சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த ஆயிரத்து 500 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் குடியரசு தின விடுமுறையையொட்டி விற்பனை செய்ய, சிலர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பாம்பன் காவல்நிலைய போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, பாம்பன் டாஸ்மாக் கடையின் அருகே உள்ள தகர கொட்டகையில் விற்பனை செய்வதற்காக மர்மநபர்கள் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
 

ராமநாதபுரம்

பாம்பனில் சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த ஆயிரத்து 500 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் குடியரசு தின விடுமுறையையொட்டி விற்பனை செய்ய, சிலர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பாம்பன் காவல்நிலைய போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, பாம்பன் டாஸ்மாக் கடையின் அருகே உள்ள தகர கொட்டகையில் விற்பனை செய்வதற்காக மர்மநபர்கள் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்த 3 மர்மநபர்கள் தப்பியோடினர். தொடர்ந்து, அங்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த சுமார் ஆயிரத்து 500 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே ராமேஸ்வரத்தில் மதுக்கடை திறக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், பாம்பன் மற்றும் மண்டபம் பகுதிகளில் இருந்து மதுபானங்களை வாங்கிச் சென்று தீவில் விற்பனை செய்வதாக அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.