×

ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்… 17 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்றனர்…

ராமநாதபுரம் இலங்கை சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் மேற்கொண்டு வந்த வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, 17 நாட்களுக்கு பிறகு, இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கடந்த மாதம் ராமேஸ்வரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 40 மீனவர்கள் மற்றும் அவர்களது 6 படகுகளை எல்லை தாண்டி வந்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இந்த சம்பவத்திற்கு கண்டம் தெரிவித்தும், மீனவர்கள் விடுவிக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் தீவு
 

ராமநாதபுரம்

இலங்கை சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் மேற்கொண்டு வந்த வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, 17 நாட்களுக்கு பிறகு, இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

கடந்த மாதம் ராமேஸ்வரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 40 மீனவர்கள் மற்றும் அவர்களது 6 படகுகளை எல்லை தாண்டி வந்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இந்த சம்பவத்திற்கு கண்டம் தெரிவித்தும், மீனவர்கள் விடுவிக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் தீவு மீனவர்கள் கடந்த 17 நாட்களாக தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். வேலை நிறுத்தம் காரணமாக வருவாய் இல்லாததால் மீனவர்கள் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், நேற்று ராமேஸ்வரத்தில் அனைத்து மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதில், மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு உறுதி அளித்ததன் பேரில், வரும் தைத் திருநாளை அனைவரும் கொண்டாடும் விதமாக வேலை நிறுத்த போராட்டத்தை◌ே தற்காலிகாமாக வாபஸ் பெற்று, இன்று முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முடிவு செய்யப்பட்டது. மேலும், எந்த காரணம் கொண்டும் படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் செல்ல கூடாது எனவும், தடைசெய்த வலைகளை பயன்படுத்தக் கூடாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தீர்மானத்தை மீறும் படகுகளை ராமேஸ்வரம் துறைமுகத்தில் நிறுத்தம் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும்முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், ராமேஸ்வரம் தீவு மீனவர்கள் 17 நாட்களுக்கு பிறகு இன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.