×

மீனவர் வலையில் சிக்கிய சித்தாமையை மீட்டு, கடலில் விட்ட வனத்துறையினர்

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் கடற்கரை அருகே உள்ள ஆஞ்சநேயர் புரம் கடற்கரைப் பகுதியில் மீனவர்கள் கரைவலை மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மீனவர்கள் வலையில் சிக்கிய சித்தாமையை வனத் தடுப்பு காவலர்கள் பத்திரமாக மீட்டு கடலில் விட்டனர். மன்னார் வளைகுடா பகுதியில் வசித்து வரும் சித்தாமை மற்றும் பெருந்தலை ஆமைகள் முட்டையிடும் காலம் என்பதால் அதிக அளவில் ஆமைகள் கரைப் பகுதிக்கு வரக்கூடும் என்றும் மீனவர்கள் மீன் பிடிப்பில் ஈடுபடும் போது ஏதேனும் ஆமைகள் வலையில் சிக்கினார்
 

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் கடற்கரை அருகே உள்ள ஆஞ்சநேயர் புரம் கடற்கரைப் பகுதியில் மீனவர்கள் கரைவலை மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மீனவர்கள் வலையில் சிக்கிய சித்தாமையை வனத் தடுப்பு காவலர்கள் பத்திரமாக மீட்டு கடலில் விட்டனர்.

மன்னார் வளைகுடா பகுதியில் வசித்து வரும் சித்தாமை மற்றும் பெருந்தலை ஆமைகள் முட்டையிடும் காலம் என்பதால் அதிக அளவில் ஆமைகள் கரைப் பகுதிக்கு வரக்கூடும் என்றும் மீனவர்கள் மீன் பிடிப்பில் ஈடுபடும் போது ஏதேனும் ஆமைகள் வலையில் சிக்கினார் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் அல்லது பாதுகாப்பாக எடுத்து கடலில் விட வேண்டும் என தெரிவித்தார்.இன்று வலையில் சிக்கிய ஆமை சுமார் 7 ஆண்டுகள் இருக்கும் என்றும் அதன் எடை சுமார் 30 கிலோ இருக்கும் எனவும் தெரிவித்தார்.