×

“ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழையால் 30 வீடுகள் சேதம்” – மாவட்ட ஆட்சியர்

ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக 30 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார். புரெவி புயல் காரணமா பெய்த கனமழையால் பாம்பன் சின்னப்பாலம் பகுதியில் சேதமடைந்த படகுகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தர்மேந்திர யாதவ் மற்றும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் படகு மூலம் சென்று பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, பெருமளவு சேதங்கள் தவிர்க்கப்பட்டு
 

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக 30 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார். புரெவி புயல் காரணமா பெய்த கனமழையால் பாம்பன் சின்னப்பாலம் பகுதியில் சேதமடைந்த படகுகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தர்மேந்திர யாதவ் மற்றும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் படகு மூலம் சென்று பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, பெருமளவு சேதங்கள் தவிர்க்கப்பட்டு உள்ளதாக கூறினார். மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக 30 வீடுகள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 35 விசைப்படகுகள் கரை ஒதுங்கி உள்ளதாகவும் தெரிவித்தார். படகுகளை மீட்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறிய ஆட்சியர், நாட்டுப்படகுகள் சேதம் குறித்து மீன்வளத்துறை மூலம் ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கனமழை காரணமாக ராமேஸ்வரம் பகுதியில் நேற்று இரவு முதல் மின்சாரம் தடை பட்டுள்ளதாக தெரிவித்த ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ், அவற்றை சீரமைக்கும் பணியில் வெளியூர்களை சேர்ந்த 35 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். அத்துடன், தெற்கு கரையோர பகுதியில் உள்ளே புகுந்த கடல்நீரை, விரைந்து நடவடிக்கை எடுத்து வெளியேற்றப்பட்டு உள்ளதாக கூறிய ஆட்சியர், மழை இன்னும் பெய்ய வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் அவசியம் இன்றி வெளியே வர வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.