×

படகில் எரிபொருள் தீர்ந்ததால் தீவில் சிக்கித்தவித்த பெண் உட்பட 3 பேர் மீட்பு

ராமேஸ்வரம் படகில் எரிபொருள் தீர்ந்ததால் 3 நாட்களாக மனோலி தீவில் சிக்கித்தவித்த ஒரு பெண் உள்பட 3 பேரை, இந்திய கடலோர காவல்படையினர் மீட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சின்னபாலம் பகுதியை சேர்ந்த பொங்கவள்ளி, சங்கர் ,சரவணன் ஆகியோர், கடந்த 29ஆம் தேதி மன்னார்வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது, படகில் டீசல் தீர்ந்ததால், மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள மனோலிதீவில் படகு தரை தட்டியது. இதனால், 3 பேரும் கடந்த 3 தினங்களாக தீவில்
 

ராமேஸ்வரம்

படகில் எரிபொருள் தீர்ந்ததால் 3 நாட்களாக மனோலி தீவில் சிக்கித்தவித்த ஒரு பெண் உள்பட 3 பேரை, இந்திய கடலோர காவல்படையினர் மீட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சின்னபாலம் பகுதியை சேர்ந்த பொங்கவள்ளி, சங்கர் ,சரவணன் ஆகியோர், கடந்த 29ஆம் தேதி மன்னார்வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது, படகில் டீசல் தீர்ந்ததால், மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள மனோலிதீவில் படகு தரை தட்டியது. இதனால், 3 பேரும் கடந்த 3 தினங்களாக தீவில் தஞ்சம் அடைந்தனர்.

3 பேரையும் உறவினர்கள் தேடி வந்த நிலையில், இன்று அவர்கள் இருக்கும் இடம் குறித்து மீன்வளத்துறை துணை இயக்குனர் இளம்வழுதிக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, ஹோவர் கிராப்ட் கப்பல் மூலமாக அங்குசென்ற இந்திய கடலோர காவல் படையினர், 3 பேரையும் மீட்டு மண்டபம் கடலோர காவல் படை முகாமிற்கு கொண்டு வந்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின் மீன்வளத்துறை உதவி இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர்கள், பின்னர் சின்னப்பாலம் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.