×

சாலையில் சடலமாக கிடந்த இளைஞர்… சாவில் மர்மம் உள்ளதாக கூறி உறவினர்கள் ஆர்ப்பாட்டம்…

தேனி தேனியில் இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் குற்றவாளிகளை கைதுசெய்யக் கோரி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்த ஒண்டிவீரன் மகன் ரவிக்குமார் (26). இவர் பொறியியல் பட்டதாரியான இவர் பெங்களூரில் பணிபுரிந்து வந்தார். கொரோனா காரணமாக சொந்த ஊருக்கு திரும்பிய ரவிக்குமார், நேற்று மாலை வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்ற நிலையில், இரவாகியும் வீடு திரும்ப வில்லை என கூறப்படுகிறது. இதனால்
 

தேனி

தேனியில் இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் குற்றவாளிகளை கைதுசெய்யக் கோரி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்த ஒண்டிவீரன் மகன் ரவிக்குமார் (26). இவர் பொறியியல் பட்டதாரியான இவர் பெங்களூரில் பணிபுரிந்து வந்தார். கொரோனா காரணமாக சொந்த ஊருக்கு திரும்பிய ரவிக்குமார், நேற்று மாலை வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்ற நிலையில், இரவாகியும் வீடு திரும்ப வில்லை என கூறப்படுகிறது. இதனால் உறவினர்கள் தேடி சென்றபோது, போடி சில்லமரத்துப்பட்டி சாலையோரத்தில் பலத்த ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் போலீசார் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், ரவிக்குமாரின் மரணத்தில் மர்மமம் இருப்பதாகவும், கொலையாளிகளை கைதுசெய்யவும் வலியுறுத்தி அவரது உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், குற்றவாளிகளை கைதுசெய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றும் அறிவித்தனர். தொடர்ந்து, இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிப்பதற்காக அவர்கள் கலைந்துசென்றனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக தேனி அரசு மருத்துவமனையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டு உள்ளது.