×

தளர்வுகளற்ற பொதுமுடக்கம்… தமிழக – கேரள எல்லையில் தேனி மாவட்ட எஸ்.பி. ஆய்வு

தேனி தேனி மாவட்டத்தில் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழக – கேரள எல்லைப் பகுதியில் மாவட்ட எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் கொரோனா 2ஆம் அலை பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வுகளற்ற பொதுமுடக்கம் கடைபிடிக்கப்படுகிறது. இதன்படி, தேனி மாவட்டத்தில் தளர்வற்ற ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக தேனி நகரம், கம்பம், ஆண்டிப்பட்டி, உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகள் முழுமையாக வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமுடக்கத்தை ஒட்டி,
 

தேனி

தேனி மாவட்டத்தில் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழக – கேரள எல்லைப் பகுதியில் மாவட்ட எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் கொரோனா 2ஆம் அலை பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வுகளற்ற பொதுமுடக்கம் கடைபிடிக்கப்படுகிறது. இதன்படி, தேனி மாவட்டத்தில் தளர்வற்ற ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக தேனி நகரம், கம்பம், ஆண்டிப்பட்டி, உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகள் முழுமையாக வெறிச்சோடி காணப்பட்டது.

பொதுமுடக்கத்தை ஒட்டி, தேனி மாவட்ட எஸ்.பி. சாய்சரண் தேஜஸ்வி தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து, அவசியமின்றி யாரேனும் அவசியம் இன்றி வெளியே சுற்றுகின்றனரா? என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கம்பம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பேருந்து நிலையம், கம்பம் மெயின்ரோடு, வடக்குப்பட்டி, வேலப்பர் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட எஸ்.பி. சாய்சரண் தேஜஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், தமிழக – கேரள எல்லையில் உள்ள கம்பம் மெட்டு சோதனைச் சாவடியில் நடந்து வரும் கண்காணிப்பு பணிகளையும் அவர் ஆய்வுசெய்தார்.