×

கர்ப்பிணி மனைவியை அடித்துக்கொன்ற கணவருக்கு தூக்கு தண்டனை விதித்து, தேனி நீதிமன்றம் தீர்ப்பு

தேனி மாவட்டத்தில் கர்ப்பிணி மனைவியை கருச்சிதைவுக்கு உள்ளாக்கி கொலை செய்த வழக்கில், கணவருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீரப்பு வழங்கியது. தேனி மாவட்டம் சின்னமனூர் காந்திநகர் காலனியை சேர்ந்த மாரிமுத்து மகன் சுரேஷ்(41). இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஹைவேவிஸ் பேரூராட்சி தலைவராக இருந்தார். இவருக்கு கற்பகவள்ளி (24) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கற்பகவள்ளி 3-வது முறையாக கர்ப்பிணி ஆகியுள்ளார். திடீரென அவரது நடத்தையில் சந்தேகம் கொண்ட
 

தேனி மாவட்டத்தில் கர்ப்பிணி மனைவியை கருச்சிதைவுக்கு உள்ளாக்கி கொலை செய்த வழக்கில், கணவருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீரப்பு வழங்கியது. தேனி மாவட்டம் சின்னமனூர் காந்திநகர் காலனியை சேர்ந்த மாரிமுத்து மகன் சுரேஷ்(41). இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஹைவேவிஸ் பேரூராட்சி தலைவராக இருந்தார். இவருக்கு கற்பகவள்ளி (24) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கற்பகவள்ளி 3-வது முறையாக கர்ப்பிணி ஆகியுள்ளார். திடீரென அவரது நடத்தையில் சந்தேகம் கொண்ட சுரேஷ் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் தேதி அன்று, 6 மாத கர்ப்பிணியாக இருந்த கற்பகவள்ளியை கடுமையாக தாக்கி, தாலிக் கயிற்றினால் அவரது கழுத்தை இறுக்கியுள்ளார். இந்த சம்பவத்தில், அடி வயிற்றில் பலத்த காயமடைந்த கர்ப்பகவள்ளிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றதாக கூறி நாடகமாடிய சுரேஷ், அவரை சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர், மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் கற்பகவள்ளி தாக்கி கொலை செய்யப்பட்டதும், அவருடைய வயிற்றில் இருந்த 6 மாத கரு சிதைந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பேரூராட்சி தலைவராக இருந்த சுரேசை கைதுசெய்தனர். இந்த வழக்கின் விசாரணை தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தத. நேற்று இறுதி விசாரணை முடிந்த நிலையில் இந்த வழக்கில் சுரேஷை குற்றவாளி என நீதிபதி அப்துல்காதர் தீர்ப்பு அளித்தார். மேலும், தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். அதன்படி இன்று காலை தீர்ப்பு விவரங்களை வெளியிட்ட நீதிபதி, மனைவியைக் கொலை செய்த குற்றத்திற்காக சுரேசை சாகும் வரை தூக்கிலிட தீர்ப்பளித்தார். அத்துடன், 6 மாத குழந்தையை கருச்சிதைவு செய்த குற்றத்திற்காக சுரேஷூக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்த நீதிபதி, அதனை கட்டத் தவறினால் 2 ஆண்டுகள் கூடுதலாக சிறை தண்டனை பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.