×

தேனியில் மின்னணு இயந்திரங்களை ஒப்படைத்து, ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம்

தேனி நியாய விலைக் கடைகளில் மின்னணு இயந்திரத்தில் ஏற்படும் சேவை குறைபாட்டை சீரமைக்க வலியுறுத்தி, தேனி மாவட்ட நியாய விலைக்கடை பணியாளர்கள், தங்களது மின்னணு இந்திரங்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் நடந்த இந்த போராட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த 369 விற்பனையாளர்கள் பங்கேற்றனர். ஆனால், வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர்கள் வர தாமதம் ஆனதால், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அலுவலகம் முன்பாக நீண்ட
 

தேனி

நியாய விலைக் கடைகளில் மின்னணு இயந்திரத்தில் ஏற்படும் சேவை குறைபாட்டை சீரமைக்க வலியுறுத்தி, தேனி மாவட்ட நியாய விலைக்கடை பணியாளர்கள், தங்களது மின்னணு இந்திரங்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் நடந்த இந்த போராட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த 369 விற்பனையாளர்கள் பங்கேற்றனர். ஆனால், வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர்கள் வர தாமதம் ஆனதால், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அலுவலகம் முன்பாக நீண்ட நேரம் காத்திருந்தனர். பின்னர், அலுவலகத்திற்கு வந்த வட்ட வழங்கல் அதிகாரிகள் இயந்தரங்களை வாங்க மறுத்து, அவடர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டார்.

மனு அளித்த பின் பேசிய ரேஷன்கடை விற்பனையாளர்கள், “அரசு மின்னணு (பி.ஓ.எஸ்.) இயந்திரத்தின் மூலமாக ரேஷன் பொருட்களை வழங்க உத்தரவிட்டு உள்ளது. ஆனால் இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள சேவை குறைபாட்டால், பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் பொருட்களை வழங்க முடியவில்லை. இதுகுறித்து, அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்காததால் எந்திரங்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்” என தெரிவித்தனர்.