×

நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு- அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த விவசாயிகளால் பரபரப்பு

தேனி ஆண்டிப்பட்டி அருகே கண்மாயை ஆக்கிரமித்து நடவுசெய்த செய்த தென்னை மரங்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள வருசநாடு பகுதியில் பஞ்சதாங்கி கண்மாய் அமைந்துள்ளது. சுமார் 64.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாயில், தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து தென்னை, தேக்கு உள்ளிட்ட மரங்களை நடவு செய்து வளர்த்து வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், கண்மாயை
 

தேனி

ஆண்டிப்பட்டி அருகே கண்மாயை ஆக்கிரமித்து நடவுசெய்த செய்த தென்னை மரங்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள வருசநாடு பகுதியில் பஞ்சதாங்கி கண்மாய் அமைந்துள்ளது. சுமார் 64.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாயில், தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து தென்னை, தேக்கு உள்ளிட்ட மரங்களை நடவு செய்து வளர்த்து வருவதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், கண்மாயை ஆக்கிரமித்து நடவு செய்த மரங்களை அகற்ற, மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர் சர்வே பணிகள் மேற்கொண்டு, தற்போது முதற்கட்டமாக மரம் வெட்டும் பணிக்கு ரூ.6.95 லட்சம் ஏலம் விடப்பட்டு, மரங்கள் வெட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், மரங்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஒப்பந்ததாரர்களுடன், ஆக்கிரமிப்பு விசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, கண்மாய் பரப்பை விட கூடுதலான அளவு நிலம் அளவீடு செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய விவசாயிகள், தங்களது நிலத்தை மறு அளவீடு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதனை அடுத்து, ஆக்கிரமிப்பு விவசாயிகள் நிலத்தை மீண்டும் அளவீடு செய்ய அதிகாரிகள் இன்று ஒரு நாள் அவகாசம் வழங்கினர். மேலும், பிரச்சினை ஏற்படுவதை தடுக்கும் விதமாக அந்த பகுதியில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.