×

தேவாரம் வனப்பகுதியில் கேரள மாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

தேனி தேவாரம் வனப்பகுதியில் கேரளாவை சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் தேவாரம் பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி(50). இவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தனியார் எஸ்டேட்டில் கடந்த 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இதனிடையே, முத்துசாமி கடந்த சில வருடங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமடையாததால், அவர் வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில்
 

தேனி

தேவாரம் வனப்பகுதியில் கேரளாவை சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் தேவாரம் பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி(50). இவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தனியார் எஸ்டேட்டில் கடந்த 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இதனிடையே, முத்துசாமி கடந்த சில வருடங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமடையாததால், அவர் வேதனையில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மீண்டும் வயிற்று ஏற்பட்டதால் முத்துச்சாமி ஊரிலிருந்து புறப்பட்டு தேவாரம் மலைப்பாதை வழியாக தேனியில் உள்ள மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார். சாஸ்தா கோவில் அருகேயுள்ள நமரி எஸ்டேட் பகுதியில் வந்தபோது முத்துச்சாமி, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மகள் பவித்ராவுக்கு போனில் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பவித்ரா இது குறித்து தேவாரம் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, முத்துச்சாமி மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார்.

இதனை அடுத்து, போலீசார் அவரது உடலை கைப்பற்றி உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.