×

அரசுப் பேருந்து மோதி சரக்கு வேன் ஓட்டுநர் உயிரிழப்பு

தேனி தேனி அருகே அரசுப் பேருந்து மோதிய விபத்தில் சரக்கு வேன் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகேயுள்ள ராயப்பன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(52). இவர் அதே பகுதியில் சரக்கு வேன் ஓட்டி வருகிறார். இந்த நிலையில் நேற்று ராயப்பன்பட்டியில் இருந்து கொத்தமல்லி பாரம் ஏற்றிக்கொண்டு தேனி மார்க்கெட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வீரபாண்டி அருகேயுள்ள உப்புகோட்டை விலக்கு பகுதியில் சென்றபோது சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்திய கண்ணன், சாலையின் எதிர் புறத்தில் இருந்த கடைக்கு சென்று
 

தேனி

தேனி அருகே அரசுப் பேருந்து மோதிய விபத்தில் சரக்கு வேன் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகேயுள்ள ராயப்பன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(52). இவர் அதே பகுதியில் சரக்கு வேன் ஓட்டி வருகிறார். இந்த நிலையில் நேற்று ராயப்பன்பட்டியில் இருந்து கொத்தமல்லி பாரம் ஏற்றிக்கொண்டு தேனி மார்க்கெட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வீரபாண்டி அருகேயுள்ள உப்புகோட்டை விலக்கு பகுதியில் சென்றபோது சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்திய கண்ணன், சாலையின் எதிர் புறத்தில் இருந்த கடைக்கு சென்று தேனீர் அருந்தினார்.

பின்னர் சாலை கடக்க முயன்றபோது கண்ணன் மீது சிவகங்கையில் இருந்து கம்பம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.விபத்து குறித்து தகவல் அறிந்த வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து குறித்து கண்ணன் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சிவகங்கையை சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் முருகன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.