×

ஹைவேவிஸ் பகுதியில் காட்டுயானை தாக்கி தொழிலாளி பலி- மேகமலை செல்ல வாகனங்களுக்கு கட்டுப்பாடு

தேனி தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் காட்டுயானை தாக்கியதில் எஸ்டேட் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ள மலைகளில் ஹைவேவிஸ், மேல்மணலாறு, மேகமலை, இரவங்கலாறு உள்ளிட்ட மலைகிராமங்கள் உள்ளன. அங்குள்ள தனியார் எஸ்டேட்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், ஹைவேவிஸ் மலைப்பகுதியில் கடந்த 2 மாதங்களாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. கடந்த வாரம் மேல்மணலாறு பகுதியில் காட்டுயானை தாக்கியதில் அமாவாசை என்ற கூலி தொழிலாளி உயிரிழந்தார். இதனால் அந்த
 

தேனி

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் காட்டுயானை தாக்கியதில் எஸ்டேட் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ள மலைகளில் ஹைவேவிஸ், மேல்மணலாறு, மேகமலை, இரவங்கலாறு உள்ளிட்ட மலைகிராமங்கள் உள்ளன. அங்குள்ள தனியார் எஸ்டேட்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், ஹைவேவிஸ் மலைப்பகுதியில் கடந்த 2 மாதங்களாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. கடந்த வாரம் மேல்மணலாறு பகுதியில் காட்டுயானை தாக்கியதில் அமாவாசை என்ற கூலி தொழிலாளி உயிரிழந்தார். இதனால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் அப்பர் மணலாறில் உள்ள லைன்வீட்டில் புகுந்த காட்டுயானை வீட்டில் தூங்கிகொண்டிருந்த முத்தையா என்பவரை தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். காட்டுயானைகள் தாக்கி அடுத்தடுத்து இருவர் உயிரிழந்ததை கண்டித்து, மேல்மணலாறு மலை கிராமத்தில் இருந்து புறப்படும் அரசு வாகனத்தை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், வனவிலங்குள் தாக்குதல் சம்பவத்தை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனிடையே, மேகமலை மலைச்சாலையில் வன உயிரனங்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் இன்று முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வாகனங்கள் சென்று வர வனத்துறையினர் கட்டுப்பாடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது