×

ஆங்கில வழி கல்வியால் வேதனை… டிப்ளமோ மாணவர் தூக்கிட்டு தற்கொலை…

தேனி ஆண்டிப்பட்டி அருகே ஆங்கில வழியில் பாடம் படிக்க பயந்து, டிப்ளமோ மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்த முத்தனம்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகன் விஜயக்குமார் (17). பிளஸ் 2 முடித்துள்ள விஜயகுமார், தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் மருந்தாளுநர் டிப்ளமோ படிப்பில் சேர்ந்துள்ளார். இதனிடையே, ஆரம்பம் முதலே தமிழ் வழியில் படித்த விஜயகுமாருக்கு, ஆங்கில வழியில் படிக்க சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தந்தையிடம் தெரிவித்த போது, அவர்
 

தேனி

ஆண்டிப்பட்டி அருகே ஆங்கில வழியில் பாடம் படிக்க பயந்து, டிப்ளமோ மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்த முத்தனம்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகன் விஜயக்குமார் (17). பிளஸ் 2 முடித்துள்ள விஜயகுமார், தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் மருந்தாளுநர் டிப்ளமோ படிப்பில் சேர்ந்துள்ளார். இதனிடையே, ஆரம்பம் முதலே தமிழ் வழியில் படித்த விஜயகுமாருக்கு, ஆங்கில வழியில் படிக்க சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தந்தையிடம் தெரிவித்த போது, அவர் விஜயகுமாரை சமாதானம் செய்து அனுப்பி உள்ளார். ஆனால், ஆங்கில வழியில் பாடம் படிக்க முடியாததால் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபேது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மகன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது குறித்து க.விலக்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சடலத்தை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.