×

தேனி மாவட்டத்தில் 10,954 பயனாளிகளுக்கு, ரூ.4.51 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கிய துணை முதல்வர்

தேனி தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சரும் ஆன ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு, 10 ஆயிரத்து 954 பயனாளிகளுக்கு, சுமார் 4 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்படி, கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்க உறுப்பினர்களுக்கு தலா 9 ஆயிரம் ரூபாய் வீதம் 70 பயனாளிகளுக்கு 6 லட்சத்து
 

தேனி

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சரும் ஆன ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு, 10 ஆயிரத்து 954 பயனாளிகளுக்கு, சுமார் 4 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன்படி, கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்க உறுப்பினர்களுக்கு தலா 9 ஆயிரம் ரூபாய் வீதம் 70 பயனாளிகளுக்கு 6 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயும், 10 ஆயிரம் ரூபாய் வீதம், 237 பயனாளிகளுக்கு 23 லட்சத்து 70
ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்பட்டது. இதேபோல், விலையில்லா தேய்ப்பு பெட்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 126 பயனாளிகளுக்கு 6 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயும், தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 76 பயனாளிகளுக்கு 2 லட்சத்து 57 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்பட்டது.

மேலும், பதினொன்றாம் வகுப்பு பயிலும் 4 ஆயிரத்து 853 மாணவர்கள் மற்றும் 5 அயிரத்து 592 மாணவியர்களுக்கு ரூபாய் 4 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளையும் அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், அதிமுக எம்.பி. ரவீந்திரநாத், எம்எல்ஏ ஜக்கையன் உள்ளிட்டோர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.