×

பிடிஓ அவமதிப்பு விவகாரம்- ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்

தேனி ராமநாதபுரத்தில் பாஜகவினர் பி.டி.ஓ-வை அறையில் வைத்து பூட்டிய சம்பவத்தை கண்டித்து, தேனியில் ஊரக வளர்ச்சித்துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிந்த கிராம ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் செல்லம்மாளை, பாஜகவினர் அலுவலக அறையில் வைத்து பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பி.டி.ஓவை அவமதித்த பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தேனி மாவட்டம் மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊரக வளர்ச்சிதுறை ஊழியர் சங்கம் சார்பில்
 

தேனி

ராமநாதபுரத்தில் பாஜகவினர் பி.டி.ஓ-வை அறையில் வைத்து பூட்டிய சம்பவத்தை கண்டித்து, தேனியில் ஊரக வளர்ச்சித்துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிந்த கிராம ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் செல்லம்மாளை, பாஜகவினர் அலுவலக அறையில் வைத்து பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பி.டி.ஓவை அவமதித்த பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தேனி மாவட்டம் மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊரக வளர்ச்சிதுறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இதில, மாவட்ட பொருளாளர் தாமோதரன், இணைச் செயலாளர் ராஜகோபால் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது, பாஜகவினர் அராஜகத்தை கண்டித்தும், சம்பந்தப்பட்ட நபர்களை கைதுசெய்ய கோரியும் அவர்கள் முழக்கமிட்டனர். பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.