×

டெல்லியில் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்!

தேனி டெல்லியில் சாலை விபத்தில் உயிரிழந்த தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரனின் உடல், அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. தேனி மாவட்டம் கம்பம் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் பிரபாகரன்(33). இவர் புதுடெல்லி ராணுவ பிரிவில் ஹவில்தாராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவி உள்ளளார். இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு பிரபாகரன் பணிமுடிந்து, தங்குமிடத்திற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது,
 

தேனி

டெல்லியில் சாலை விபத்தில் உயிரிழந்த தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரனின் உடல், அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் பிரபாகரன்(33). இவர் புதுடெல்லி ராணுவ பிரிவில் ஹவில்தாராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவி உள்ளளார். இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு பிரபாகரன் பணிமுடிந்து, தங்குமிடத்திற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது, வாகனம் எதிர்பாராத விதமாக மரத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் பிரபாகரன் உயிரிழந்தார்.

இதனையடுத்து, நேற்று ராணுவ அலுவலகத்தில் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, நேற்று மாலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருச்சி கொண்டுவரப்பட்ட அவரது உடல், பின்னர் ஆம்பூலன்ஸ் மூலம் இன்று காலை கம்பம் கொண்டு வரப்பட்டது. அங்கு தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில், கம்பம் வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் உடலுக்கு மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலிக்கு பின், கம்பம் சுளிருப்பட்டி சாலையில் உள்ள மாயனத்திற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பிரபாகரனின் உடலுக்கு ராணுவ வீரர்கள் தேசியை கொடியை போர்த்தி மரியாதை செலுத்தியதை தொடர்ந்து, அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.