×

தேனி மாவட்டத்தில் 9 பேருக்கு நல்லாசிரியர் விருது… ஆட்சியர் முரளிதரன் வழங்கினார்!

தேனி தேனி மாவட்டத்தில் ஆசிரியர் தினத்தையொட்டி, 9 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருதுகளை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் வழங்கினார். முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவாக, தமிழகத்தில் ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்களுக்கு, அரசு சார்பில் மாநில நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இதன்படி, நடப்பாண்டு தேனி மாவட்டத்தை சேர்ந்த 9 பேருக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி, நேற்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நல்லாசிரியர் விருதுபெறும்
 

தேனி

தேனி மாவட்டத்தில் ஆசிரியர் தினத்தையொட்டி, 9 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருதுகளை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் வழங்கினார்.

முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவாக, தமிழகத்தில் ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்களுக்கு, அரசு சார்பில் மாநில நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இதன்படி, நடப்பாண்டு தேனி மாவட்டத்தை சேர்ந்த 9 பேருக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி, நேற்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நல்லாசிரியர் விருதுபெறும் 9 பேருக்கும் மாவட்ட ஆட்சியர் முரளிதரன், வெள்ளிப்பதக்கம், பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.10 ஆயிரத்துக்கான காசோலைகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து, நல்லாசிரியர் விருதுபெற்ற சண்முகசுந்தரம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சன், விருதுடன் பெற்ற ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக ஆட்சியர் முரளிதரனிடம் வழங்கினார்.

தேனி மாவட்டத்தில் மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர்களின் விபரம்: 1.வெங்கடேஸ்குமார் – தலைமையாசிரியர், ஆண்டிபட்டி ரங்கசமுத்ரம் அரசு மேல்நிலைப்பள்ளி 2.ஜான்சன் – தலைமை ஆசிரியர், சண்முகசுந்தரபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, 3.சின்னராஜ் – பட்டதாரி ஆசிரியர், சில்லமரத்துபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, 4.சுகந்தி – பட்டதாரி ஆசிரியை, அன்னஞ்சி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி, 5. கணேசன் – தலைமை ஆசிரியர், கம்பம் ஸ்ரீமுக்தி விநாயகர் நடுநிலைப்பள்ளி.

6.சித்ரா – தலைமை ஆசிரியை, கோம்பை ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி நிலைப்பள்ளி, 7.தமிழ்செல்வி – தலைமை ஆசிரியை பெரியகுளம் அழகாபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, 8.சிவராமச்சந்திரன் – முதல்வர், சின்னமனூர் மேயர் ராம் மெட்ரிக் பள்ளி, 9.பிரபு – முதுநிலை விரிவுரையாளர், உத்தமபாளையம், ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்.