×

ஊரடங்கால் எளிமையாக நடந்த திருமணம்… மிஞ்சிய ரூ.37 லட்சத்தை கொரோனா பணிக்கு வழங்கிய புதுமண தம்பதி!

திருப்பூர் திருப்பூரில் ஊரடங்கால் திருமணம் எளிமையாக நடைபெற்றதால், திருமண செலவுக்கு வைத்திருந்த ரூ.37 லட்சத்தை கொரோன தடுப்பு பணிக்கு வழங்கிய புதுமண தம்பதிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். திருப்பூரை சேர்ந்தவர் தொழிலதிபர் அருள்செல்வம். இவரது 2-வது மகன் அருள் பிரனேஷ். இவருக்கும், திருப்பூர் விகாஸ் வித்யாலயா, வித்யாசாகர் குழுமத்தை சேர்ந்த கவுரிசங்கர் – கவிதா தம்பதியினரின் மகள் அனுவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, கடந்த 14ஆம் தேதி காங்கேயம் வட்டமலை அங்காளம்மன் கோவிலில் கொரோனா
 

திருப்பூர்

திருப்பூரில் ஊரடங்கால் திருமணம் எளிமையாக நடைபெற்றதால், திருமண செலவுக்கு வைத்திருந்த ரூ.37 லட்சத்தை கொரோன தடுப்பு பணிக்கு வழங்கிய புதுமண தம்பதிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

திருப்பூரை சேர்ந்தவர் தொழிலதிபர் அருள்செல்வம். இவரது 2-வது மகன் அருள் பிரனேஷ். இவருக்கும், திருப்பூர் விகாஸ் வித்யாலயா, வித்யாசாகர் குழுமத்தை சேர்ந்த கவுரிசங்கர் – கவிதா தம்பதியினரின் மகள் அனுவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, கடந்த 14ஆம் தேதி காங்கேயம் வட்டமலை அங்காளம்மன் கோவிலில் கொரோனா விதிகளுக்கு உட்பட்டு எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தை பிரம்மாண்டமான முறையில் நடத்த இரு வீட்டாரும் திட்டமிட்டிருந்த நிலையில், எளிமையான முறையில் நடந்ததால், ரூ.50 லட்சம் பணம் மிஞ்சியது. இந்த பணத்தை நற்பணிகளுக்கு தர மணமக்கள் வீட்டார் முடிவு செய்தனர். இதன்படி, திருமம் முடிந்த கையோடு திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சைக்காக ரூ.37 லட்சத்து 66 ஆயிரம் நிதியுவியை வழங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.

இதுகுறித்து பேசிய மணமகனின் தந்தை அருள்செல்வம், திருப்பூர் அரசு மருத்துவமனை எதிரேயுள்ள ரோட்டரி கொரோனா கேர் சென்ட்ருக்கு ரூ.5 லட்சமும், பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கொரோனா மையத்திற்கு ரூ.11 லட்சமும், புஞ்சை புளியம்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கட்டமைக்கப்படும் முதியோர் இல்லத்திற்கு ரூ.2 லட்சமும் நிதியுதவி வழங்கியதாக கூறினார்.

மேலும், திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில் பல்லடம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு ஐசியு யூனிட் அமைக்க ரூ.7.66 லட்சமும், மருத்துவ செலவினங்களை எதிர்கொள்ள முடியாமல் தத்தளிக்கும் 8 குடும்பங்களுக்கு ரூ.7 லட்சமும் கொடுத்து உள்ளதாக தெரிவித்தார்.

இவற்றை தவிர்த்து, மங்களம் ரோடு பாரபாழையம் அரசுப்பள்ளிக்கு கட்டிடம் கட்ட ரூ.5 லட்சம் என மொத்தமாக ரூ.37.66 லட்சம் வழங்கியுள்ளனர். திருமணத்தில் மீதமான தொகையை பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு வழங்கியுள்ள மணமக்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.