×

தாராபுரத்தில் மாமனாரை வெட்டிப் படுகொலை செய்த மருமகன்… மைத்துனர் உள்பட இருவர் படுகாயம்!

திருப்பூர் தாராபுரத்தில் குடும்ப தகராறில் மாமனாரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மருமகன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் பழ வியபாரி காளிமுத்து. இவரது மகன் ஈஸ்வரமூர்த்தி (32). அதே பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ கன்சல்டிங் நிறுவன ஊழியர் மாரிமுத்து. இவருக்கு மதன்குமார், மைதிலி என்ற 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஈஸ்வர மூர்த்திக்கும், மைதிலிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
 

திருப்பூர்

தாராபுரத்தில் குடும்ப தகராறில் மாமனாரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மருமகன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் பழ வியபாரி காளிமுத்து. இவரது மகன் ஈஸ்வரமூர்த்தி (32). அதே பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ கன்சல்டிங் நிறுவன ஊழியர் மாரிமுத்து. இவருக்கு மதன்குமார், மைதிலி என்ற 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஈஸ்வர மூர்த்திக்கும், மைதிலிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. பின்னர், குடும்ப தகராறு காரணமாக பிரிந்த இருவரும், வெவ்வேறு நபர்களை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர். மேலும், அவர்கள் விவகாரத்து கோரி தொடர்ந்த வழக்கு தாராபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நேற்று மாலை ஈஸ்வரமூர்த்தி குடும்பத்தினருக்கும் – மைதிலி குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து ஈஸ்வரமூர்த்தி, அவரது தந்தை காளிமுத்து மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட 5 பேர், தாராபுரம் கால்நடை மருத்துவமனை அருகே நின்றிருந்த மாரிமுத்துவை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அப்போது தப்பியோட முயன்ற மாரித்துவை, அவர்கள் துரத்திச்சென்று வெட்டிக் கொலை செய்தனர். மேலும், அவரை காப்பாற்ற முயன்ற மைத்துனர் மதன்குமார், அவரது நண்பர் முருகனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்து அங்கு வந்த தாராபுரம் டிஎஸ்பி தனராஜ் தலைமையிலான போலீசார், காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், மாரிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய ஈஸ்வரமூர்த்தி, அவரது தந்தை காளிமுத்து உள்ளிட்ட 5 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.