×

திருப்பூரில் 2 மாதங்களுக்கு பின் நேற்று முதல் 50% பேருந்துகள் இயக்கம்!

திருப்பூர் திருப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா இரண்டாவது அலை தீவிரம் காரணமாக கடந்த 2 மாதங்களாக பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், தமிழக அரசு 50 சதவீத பயணிகளுடன் பேருந்தை இயக்கலாம் என அறிவித்தது. இதன்படி, நேற்று திருப்பூர் மாவட்டத்திற்கு உள் பயணிக்க 166 பேருந்துகளும், திருப்பூரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல 167 பேருந்துகளும் என மொத்தம் 333 பேருந்துகள் இயக்கப்பட்டன. முகக் கவசம் அணிந்தவர்கள்
 

திருப்பூர்

திருப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா இரண்டாவது அலை தீவிரம் காரணமாக கடந்த 2 மாதங்களாக பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், தமிழக அரசு 50 சதவீத பயணிகளுடன் பேருந்தை இயக்கலாம் என அறிவித்தது. இதன்படி, நேற்று திருப்பூர் மாவட்டத்திற்கு உள் பயணிக்க 166 பேருந்துகளும், திருப்பூரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல 167 பேருந்துகளும் என மொத்தம் 333 பேருந்துகள் இயக்கப்பட்டன.

முகக் கவசம் அணிந்தவர்கள் மட்டுமே பேருந்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். திருப்பூர் நகர பேருந்துகளில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. ஆயினும் பிற மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

குறிப்பாக சேலம், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. இதனால், வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.