×

அரியலூரில் 100% வாக்குப்பதிவு குறித்து, நூதன முறையில் விழிப்புணர்வு!

அரியலூர் சட்டமன்ற தேர்தலில், அரியலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, சமையல் எரிவாயு சிலிண்டர்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய வில்லைகள் ஒட்டும் பணி இன்று தொடங்கியது. இதனையொட்டி, அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ரத்னா கலந்துகொண்டு, எரிவாயு சிலிண்டர்களில் “100 சதவீதம் வாக்களிப்போம்” என்ற வாசம் அடங்கிய வில்லைகளை ஒட்டினார். தொடர்ந்து, 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற வாசக வடிவில் அடுக்கப்பட்டிருந்த எரிவாயு
 

அரியலூர்

சட்டமன்ற தேர்தலில், அரியலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, சமையல் எரிவாயு சிலிண்டர்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய வில்லைகள் ஒட்டும் பணி இன்று தொடங்கியது.

இதனையொட்டி, அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ரத்னா கலந்துகொண்டு, எரிவாயு சிலிண்டர்களில் “100 சதவீதம் வாக்களிப்போம்” என்ற வாசம் அடங்கிய வில்லைகளை ஒட்டினார்.

தொடர்ந்து, 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற வாசக வடிவில் அடுக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்களின் மீது ஆட்சியர் ரத்னா விழிப்புணர்வு வாசகம் அடங்கிய ஒட்டு வில்லைகளை ஒட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதனை அரியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை ஏராளமான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கண்டுகளித்தனர்.