×

நள்ளிரவில் வீட்டில் புகுந்து, 3 வரை தாக்கிய சிறுத்தை… மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்…

வேலூர் குடியாத்தம் அருகே நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து 3 பேரை தாக்கிய சிறுத்தைக்கு, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எரத்தாங்கல் கலர்பாளையம் கிராமத்திற்குள் நேற்று நள்ளிரவு சிறுத்தை ஒன்று புகுந்தது. அப்போது, தெருவில் சத்தம் வருவதை கேட்டு, அந்த பகுதியை சேர்ந்த பிரேமா என்பவர் வெளியே வந்து பார்த்தார். அப்போது அருகே நின்றிருந்த சிறுத்தை, பிரேமாவை தாக்கியது. அவரது அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த மகன் மனோகரன் மற்றும்
 

வேலூர்

குடியாத்தம் அருகே நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து 3 பேரை தாக்கிய சிறுத்தைக்கு, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எரத்தாங்கல் கலர்பாளையம் கிராமத்திற்குள் நேற்று நள்ளிரவு சிறுத்தை ஒன்று புகுந்தது. அப்போது, தெருவில் சத்தம் வருவதை கேட்டு, அந்த பகுதியை சேர்ந்த பிரேமா என்பவர் வெளியே வந்து பார்த்தார். அப்போது அருகே நின்றிருந்த சிறுத்தை, பிரேமாவை தாக்கியது.

அவரது அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த மகன் மனோகரன் மற்றும் மகள் மகாலட்சுமியையும் தாக்கிய அந்த சிறுத்தை, பின்னர் வீட்டிற்குள் நுழைந்தது. அப்போது, பிரேமா சிறுத்தையை வீட்டிற்குள் வைத்து மூடினார். இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த பேர்ணாம்பட்டு வனத்துறையினர், ஓசூர் கால்நடை மருத்துவர் பிரகாஷ் ஆகியோர், மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி, சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, அது மயக்கமடைந்தது. இதனை அடுத்து, வனத்துறையினர் இரும்பு கூட்டில் வைத்து சிறுத்தையை எடுத்துச்சென்றனர்.