×

வேலூரில் அரசு மருத்துவமனை செவிலியர் கொரோனாவுக்கு பலி!

வேலூர் வேலூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு மருத்துவமனை செவிலியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வேலூர் வள்ளலார் பகுதியை சேர்ந்தவர் அருண் சுந்தரராஜ். இவரது மனைவி சாந்தகுமாரி (52). இவர் வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். கொரோனா சிறப்பு வார்டில் பணிபுரிந்து வந்த சாந்தகுமாரிக்கு கடந்த மே மாதம் 14ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, அவர் பென்லேண்ட் அரசு மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர்,
 

வேலூர்

வேலூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு மருத்துவமனை செவிலியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வேலூர் வள்ளலார் பகுதியை சேர்ந்தவர் அருண் சுந்தரராஜ். இவரது மனைவி சாந்தகுமாரி (52). இவர் வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். கொரோனா சிறப்பு வார்டில் பணிபுரிந்து வந்த சாந்தகுமாரிக்கு கடந்த மே மாதம் 14ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, அவர் பென்லேண்ட் அரசு மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சாந்த குமாரி உயிரிழந்தார்.

கொரோனா தொற்றால் அரசு மருத்துவமனை செவிலியர் உயிரிழந்த சம்பவம் வேலூரில் சுகாதாரத்துறை ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.