×

திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் பி.எஸ்.சி கெமிஸ்ட்ரி வினாத்தாளில் குளறுபடி: தவிக்கும் மாணவர்கள், பேராசிரியர்கள்

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்று வரும் பி.எஸ்.சி. கெமிஸ்ட்ரி தேர்வு வினாத்தாளில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருப்பதால் மாணவர்களும், பேராசியர்களும் குழம்பமடைந்துள்ளனர். தமிழகத்தில் அனைத்து பல்கலைக் கழகங்கள் மற்றும் அவற்றுடன் இணைப்பு பெற்றுள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று உயர்கல்வித்துறை முடிவு செய்து அறிவித்தது. அதன்படி, அந்தந்த பல்கலைக் கழகங்கள் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தி வருகின்றன. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு 16ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை தேர்வு
 

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்று வரும் பி.எஸ்.சி. கெமிஸ்ட்ரி தேர்வு வினாத்தாளில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருப்பதால் மாணவர்களும், பேராசியர்களும் குழம்பமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் அனைத்து பல்கலைக் கழகங்கள் மற்றும் அவற்றுடன் இணைப்பு பெற்றுள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று உயர்கல்வித்துறை முடிவு செய்து அறிவித்தது. அதன்படி, அந்தந்த பல்கலைக் கழகங்கள் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தி வருகின்றன.

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு 16ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை தேர்வு நடைபெறூகிறது.

திருவள்ளுவர் பல்கலைகழகத்திற்கு உட்பட்ட வேலூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய கல்லூரிகளில் இன்று பிஎஸ்சி கெமிஸ்ட்ரி இறுதியாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இன்று பிசிக்ஸ் கெமிஸ்ட்ரி என்ற தேர்வை மாணவர்கள் எழுதி வருகின்றனர்.

இன்றைய தேர்வின் கேள்வித்தாளில் நாளை தேர்வு எழுதக்கூடிய அனாலிடிகல் கெமிஸ்ட்ரி என்ற புத்தகத்திலிருந்து கேள்விகள் இருந்ததால் மாணவர்கள் குழம்பமடைந்துள்ளனர்.

மேலும், இன்றைய தேர்வுக்கு சம்பந்தம் இல்லாத பல்வேறு கேள்விகள் இடம்பெற்றுள்ளன. இதனால் தேர்வு எழுதிய மாணவர்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் பேராசிரியர்களும் குழப்பமடைந்துள்ளதால், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.