×

திருமணம் நிச்சயமான இளைஞரிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்- மர்மநபர்கள் மீது எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

தூத்துக்குடி தூத்துக்குடியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞரிடம் 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த கும்பல் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகேயுள்ள சாலைப்புதூரை பூர்வீகமாக கொண்டவர் பாலகணேஷ். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் இரும்புக்கடை நடத்தி வருகிறார். பால கணேஷுக்கு, நெல்லை மாவட்டம் திசையன்விளை ஐயன்குளம் பகுதியை சேர்ந்த நந்தினி என்பவருடன் திருமணம் நடத்த முடிவு செய்து, கடந்த டிசம்பர் 10ஆம் தேதி சாலைப்புதூரில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
 

தூத்துக்குடி

தூத்துக்குடியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞரிடம் 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த கும்பல் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகேயுள்ள சாலைப்புதூரை பூர்வீகமாக கொண்டவர் பாலகணேஷ். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் இரும்புக்கடை நடத்தி வருகிறார். பால கணேஷுக்கு, நெல்லை மாவட்டம் திசையன்விளை ஐயன்குளம் பகுதியை சேர்ந்த நந்தினி என்பவருடன் திருமணம் நடத்த முடிவு செய்து, கடந்த டிசம்பர் 10ஆம் தேதி சாலைப்புதூரில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த நிலையில், அன்றைய தினம் சாலைப்புதூரை சேர்ந்த சுந்தர் உள்ளிட்ட மூவர், பாலகணேஷின் வீட்டிற்கு சென்று, திருமணத்தை தடுத்து நிறுத்தி விடுவதாகவும், அவரது குடும்பத்தினரை அசிங்கப்படுத்தி கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பிரச்சினையை பெரிதாக்க விரும்பாத பாலகணேஷ் படப்பைக்கு திரும்பி பணியை கவனித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 8ஆம் தேதி திருமண பத்திரிக்கையை வைத்து வழிபாடு செய்ய பாலகணேஷ் குடும்பத்தினருடன், சாலைப்புதூருக்கு வந்துள்ளார். அப்போது, அவரது தொலைபேசிக்கு சென்னையில் காவல் ஆய்வாளராக பணிபுரிவதாக கூறி மர்மநபர் ஒருவர் பேசியுள்ளார். அவர் 5 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால், பாலகணேஷைம், அவரது குடும்பத்தினரையும் தூக்கிச்சென்று விடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாலகணேஷ், தனக்கு கொலை மிரட்டல் விடுத்த சுந்தர் மற்றும் மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும், மர்மநபர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்பு உள்ளதால் தங்கள் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுகொண்டார்.