×

தூத்துக்குடி- தலித் தொழிலாளியை காலில் விழவைத்த 7 பேர், வன்கொடுமை சட்டத்தில் கைது

தூத்துக்குடி கயத்தாறு அருகே ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் தலித் தொழிலாளியை காலில் விழவைத்த சம்பவத்தில் 7 பேர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை அடுத்த ஓலைகுளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ் (55). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவரும், அதே பகுதியை சேர்ந்த சிவசங்கு (60) என்பவரும், கடந்த 8ஆம் தேதி திருமங்கலக்குறிச்சி கண்மாய் அருகே ஆடு மேய்த்துள்ளனர். அப்போது, பால்ராஜ் மேய்த்த ஆட்டுக்குட்டி ஒன்று சிவசங்கு
 

தூத்துக்குடி

கயத்தாறு அருகே ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் தலித் தொழிலாளியை காலில் விழவைத்த சம்பவத்தில் 7 பேர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை அடுத்த ஓலைகுளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ் (55). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவரும், அதே பகுதியை சேர்ந்த சிவசங்கு (60) என்பவரும், கடந்த 8ஆம் தேதி திருமங்கலக்குறிச்சி கண்மாய் அருகே ஆடு மேய்த்துள்ளனர்.

அப்போது, பால்ராஜ் மேய்த்த ஆட்டுக்குட்டி ஒன்று சிவசங்கு ஆட்டுக்கூட்டத்துக்குள் சென்றுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், பால்ராஜ் கையில் வைத்திருந்த கம்பு பட்டதில் சிவசங்கு நெற்றியில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சிவசங்கு தனது உறவினர்களுடன் பால்ராஜ் வீட்டுக்குச் சென்று அவரை திருமங்கலக்குறிச்சி கண்மாய் அருகே அழைத்துச் சென்று, காலில் விழ வைத்துள்ளார். பின்னர் இதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டிய சிவசங்கு, பால்ராஜ் காலில் விழுந்ததை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மன உளைச்சல் அடைந்த பால்ராஜ் கயத்தாறு காவல் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்தார். அதன்பேரில் சிவசங்கு மற்றும் அவரது உறவினர்கள் 7 பேர் மீது போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, அவர்களை கைதுசெய்தனர்..