×

கோவில்பட்டியில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 50 கடைகளுக்கு அபராதம் விதிப்பு!

தூத்துக்குடி கோவில்பட்டி நகரில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட நகைக்கடை, பாத்திரக்கடை, பேன்ஸ்சி ஸ்டோர் உள்ளிட்ட 50 கடைகளை நகராட்சி அதிகாரிகள் மூடினர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர் பகுதியில் நேற்று தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் காய்கறி, பலசரக்கு உள்ளிட்ட கடைகள் காலை 6 மணி முதல் 5 மணி வரை விதிகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டது. இதனால், பொருட்களை வாங்க காலை முதலே ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். இந்த நிலையில், கோவில்பட்டி நகரில் தடை செய்யப்பட்ட கடைகளும்
 

தூத்துக்குடி

கோவில்பட்டி நகரில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட நகைக்கடை, பாத்திரக்கடை, பேன்ஸ்சி ஸ்டோர் உள்ளிட்ட 50 கடைகளை நகராட்சி அதிகாரிகள் மூடினர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர் பகுதியில் நேற்று தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் காய்கறி, பலசரக்கு உள்ளிட்ட கடைகள் காலை 6 மணி முதல் 5 மணி வரை விதிகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டது. இதனால், பொருட்களை வாங்க காலை முதலே ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.

இந்த நிலையில், கோவில்பட்டி நகரில் தடை செய்யப்பட்ட கடைகளும் திறந்து, வியாபாரம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், நகராட்சி சுகாதார பிரிவு அலுவலர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி நகைகடைகள், பாத்திரகடைகள், செல்போன் ரீசார்ஜ் கடைகள், பேன்ஸ்சி ஸ்டோர் உள்ளிட்ட 50 கடைகளை திறந்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, அந்த கடைகளை மூடிய நகராட்சி அதிகாரிகள், விதிகளை மீறி கடைகளை திறந்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்று உரிமையாளர்களை எச்சரித்தனர். மேலும், 16 கடைகளில் முகக்கவசம் அணியமால் இருந்த 29 நபர்களுக்கு தலா ரூ.200 வீதம் ரூ.5,800 அபராதம் விதித்தனர்.