×

101 வயதான முன்னாள் ராணுவ வீரர் – சொத்துக்களை பறித்துக் கொண்டு நடுத்தெருவில் விட்ட மகன்கள்!

101 வயதான முன்னாள் ராணுவ வீரரின் சொத்துக்களை பறித்துக் கொண்டு, அவரது மகன்களே நடுத்தெருவில் விட்ட நிகழ்வு தூத்துக்குடியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலூகா ஜெகவீரபாண்டியபுரம் கிராமத்தினை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் குருசாமி. 101வயதான இவர், 1941 முதல் 1946 வரை இந்திய இராணுவத்தில் பணியாற்றினார். அதன் பின்னர் தனது கிராமத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு சீதாலெட்சுமி என்ற மனைவியும், ராமசுப்பு, காசிராஜன்,தேவராஜ், ராஜாராம் என்ற 4 மகன்களும், குருவம்மாள்,
 

101 வயதான முன்னாள் ராணுவ வீரரின் சொத்துக்களை பறித்துக் கொண்டு, அவரது மகன்களே நடுத்தெருவில் விட்ட நிகழ்வு தூத்துக்குடியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலூகா ஜெகவீரபாண்டியபுரம் கிராமத்தினை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் குருசாமி. 101வயதான இவர், 1941 முதல் 1946 வரை இந்திய இராணுவத்தில் பணியாற்றினார். அதன் பின்னர் தனது கிராமத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு சீதாலெட்சுமி என்ற மனைவியும், ராமசுப்பு, காசிராஜன்,தேவராஜ், ராஜாராம் என்ற 4 மகன்களும், குருவம்மாள், சசிகலா என்ற 2மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் குருசாமியின் மகன்கள், தந்தையிடமிருந்து சொத்துக்களை ஏமாற்றி வாங்கி கொண்டு, தனது உணவு கூட கொடுக்காமல் நடுத்தெருவில் விட்டுள்ளனர். இது குறித்து கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயாவிடம் குருசாமி புகார் அளித்துள்ளார்.
அந்த மனுவில் தனது மூத்த மகன் ராமசுப்பு கடந்த 1991ம் ஆண்டு ஓட்டப்பிடாரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று ஏமாற்றி நிலம் மற்றும் வீடு உள்ளிட்ட சொத்துக்களை வாங்கி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
2016ம் ஆண்டு இராமசுப்பு தனது சகோதரன் ராஜாராமுடன் வந்து, சொத்து தொடர்பான ஆவணங்களை தன்னிடமிருந்து எடுத்து சென்று விட்டதாக கூறியுள்ளார்.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை இல்லை என்றும், இப்படி தன்னிடமிருந்த சொத்துக்களை பறித்து கொண்டு தன்னை பாரமரிக்கவோ, உணவு அளிக்கவோ தனது மகன்கள் முன்வரவில்லை என்றும், தான் உணவுக்காக கஷ்டப்பட்டு வருவதையும், உடல் நிலைபாதிக்கப்பட்டு வருகிறேம். இதைக் கண்ட மகள் குருவம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் , தன்னை பார்த்து வருவதாகவும், கடந்த ஆண்டு என்னுடைய 100வது பிறந்த நாள் விழாவிற்கு கூட தன் மகன்கள் வரவில்லை என்றும், எனவே தன்னை ஏமாற்றி வாங்கிய சொத்துக்களை ரத்து செய்து மீணடும் தன்னுடைய பெயருக்கு மாற்றி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

முன்னாள் ராணுவ வீரர் குருசாமியின் வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு, கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வெளியே வந்து காரில் இருந்த குருசாமியிடம் மனுவினை பெற்றுக்கொண்டு அவரது கோரிக்கை குறித்து கேட்டறிந்தார். இது குறித்து விசாரணை நடத்தி சொத்துக்களை ரத்து செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த நிகழ்வு அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.