×

“நாளை முதல்வர்” – நடிகர் விஜய் மக்கள் இயக்க போஸ்டரால் பரபரப்பு!

திருச்சி திருச்சி நகரின் பல்வேறு பகுதிகளில் நடிகர் விஜயை, நாளைய முதல்வர் என்று குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.விஜய் மக்கள் இயக்கம் சார்பில், திருச்சியின் பிரதான சாலைகளான பாலக்கரை, மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களில், முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா புகைப்படங்களின் வரிசையில் விஜய் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும், 1991 முதல் 2016 வரை சட்டமன்ற தேர்தலில் இருபெரும் தலைவர்களை கண்ட தமிழகத்தில்
 

திருச்சி

திருச்சி நகரின் பல்வேறு பகுதிகளில் நடிகர் விஜயை, நாளைய முதல்வர் என்று குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில், திருச்சியின் பிரதான சாலைகளான பாலக்கரை, மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களில், முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா புகைப்படங்களின் வரிசையில் விஜய் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

மேலும், 1991 முதல் 2016 வரை சட்டமன்ற தேர்தலில் இருபெரும் தலைவர்களை கண்ட தமிழகத்தில் தற்போது உள்ள வெற்றிடத்தை நிரப்ப வருக என குறிப்பிட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள இந்த போஸ்டரால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.