×

இருசக்கர வாகனம் மோதி அடையாளம் தெரியாத முதியவர் பலி!

திருச்சி துவரங்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், அடையாளம் தெரியாத முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த ஆத்துப்பட்டி பகுதியில் நேற்று சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, துவரங்குறிச்சியில் இருந்து காரைப்பட்டி நோக்கி சென்ற இருசக்கர வாகனம் ஒன்று, எதிர்பாராத விதமாக முதியவர் மீது அதிவேகமாக மோதியது. இதில் சாலையில் தூக்கிவீசப்பட்ட அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இருசக்கர
 

திருச்சி

துவரங்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், அடையாளம் தெரியாத முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த ஆத்துப்பட்டி பகுதியில் நேற்று சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, துவரங்குறிச்சியில் இருந்து காரைப்பட்டி நோக்கி சென்ற இருசக்கர வாகனம் ஒன்று, எதிர்பாராத விதமாக முதியவர் மீது அதிவேகமாக மோதியது.

இதில் சாலையில் தூக்கிவீசப்பட்ட அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபருக்கு படுகாயம் ஏற்பட்டது. அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள், காயமடைந்த நபரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல் நிலைய போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்த முதியவர் யார் என்று விசாரித்து வருகின்றனர்.