×

திருச்சி- அரசு விழாவில் ஓ.பி.எஸ் படம் புறக்கணிப்பு – ஆதரவாளர்கள் அதிருப்தி

திருச்சி திருச்சி அருகே தனியார் கல்லூரியில் நேற்று நடந்த அரசு விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த 525 தனியார் பள்ளிகளுக்கு 2 ஆண்டுகளுக்கான தொடர் அங்கீகாரத்தினை வழங்கினார்.இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி படம் இடம்பெற்ற நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் படம் புறக்கணிக்கப்பட்டிருந்தது. உள் அரங்கில் மட்டுமன்றி, கல்லூரி நுழைவாயில் முதல் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த அனைத்து பேனர்களிலும் முதலமைச்சர் படம் மட்டுமே இடம்பெற்றிருந்தது. ஓ.பி.எஸ்ஆதரவாளர்களிடையே
 

திருச்சி

திருச்சி அருகே தனியார் கல்லூரியில் நேற்று நடந்த அரசு விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த 525 தனியார் பள்ளிகளுக்கு 2 ஆண்டுகளுக்கான தொடர் அங்கீகாரத்தினை வழங்கினார்.
இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி படம் இடம்பெற்ற

நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் படம் புறக்கணிக்கப்பட்டிருந்தது. உள் அரங்கில் மட்டுமன்றி, கல்லூரி நுழைவாயில் முதல் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த அனைத்து பேனர்களிலும் முதலமைச்சர் படம் மட்டுமே இடம்பெற்றிருந்தது. ஓ.பி.எஸ்
ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.