×

திருச்சி- “நுண் கடன் நிறுவனங்களை கட்டுப்படுத்த வேண்டும்”- பாலபாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம்!

திருச்சி நுண் கடன் நிறுவனங்களை கட்டுப்படுத்த வேண்டும் என முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொரோனா ஊடங்கினால் வருமானம் இன்றி தவிக்கும் மக்களையும், பெண்களையும் நுண்கடன் நிறுவனங்கள் இழிவாக பேசி வட்டி வசூலிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதனால் , நுண் கடன் நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் ஆகியவற்றில் வாங்கியுள்ள கடன்களை திருப்பி செலுத்த 6 மாத காலம் அவகாசம் வழங்க வலியுறுத்தி , அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்
 

திருச்சி

நுண் கடன் நிறுவனங்களை கட்டுப்படுத்த வேண்டும் என முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொரோனா ஊடங்கினால் வருமானம் இன்றி தவிக்கும் மக்களையும், பெண்களையும் நுண்கடன் நிறுவனங்கள் இழிவாக பேசி வட்டி வசூலிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இதனால் , நுண் கடன் நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் ஆகியவற்றில் வாங்கியுள்ள கடன்களை திருப்பி செலுத்த 6 மாத காலம் அவகாசம் வழங்க வலியுறுத்தி , அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து நுண் நிதி நிறுவனங்களால் கடன்பெற்று பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை உணர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாலபாரதி வலியுறுத்தினார்.