×

திருச்சி காந்தி மார்க்கெட் இன்று முதல் மூடல் – வியாபாரிகள் கடும் எதிர்ப்பு!

திருச்சி திருச்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக காந்தி மார்க்கெட், பொன்மலை ஜி கார்னர் மைதானத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 500ஐ நெருங்கி கொண்டு உள்ளது. இதனால், மாநகராட்சி பகுதிகளில் நோய் தொற்று நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், காந்தி மார்க்கெட்டில் வழக்கம்போல் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டு வரும் நிலையில், வியாபாரிகள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிக்காதது தெரியவந்தது. இதனையடுத்து, நோய் தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல்
 

திருச்சி

திருச்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக காந்தி மார்க்கெட், பொன்மலை ஜி கார்னர் மைதானத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 500ஐ நெருங்கி கொண்டு உள்ளது. இதனால், மாநகராட்சி பகுதிகளில் நோய் தொற்று நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், காந்தி மார்க்கெட்டில் வழக்கம்போல் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டு வரும் நிலையில், வியாபாரிகள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிக்காதது தெரியவந்தது.

இதனையடுத்து, நோய் தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் காந்தி மார்க்கெட் மூடப்படும் என திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அறிவித்தனர். இதனால் அனைத்து வியாபாரிகளும் பொன்மலை ஜி கார்னர் மைதானத்திற்கு செல்லும்படி வியாபாரிகளுக்கு அறிவுத்தினர்.

இதனையடுத்து, இன்று பகல் 12 மணி வரை சில்லறை வியாபாரம் முடிந்த உடன் மார்க்கெட்டின் அனைத்து வாயில்களும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டடு உள்ளது. கொரோனாவால் மூடப்பட்ட காந்தி மார்க்கெட், வியாபாரிகள் கோரிக்கையை ஏற்று கடந்த 5 மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் மூடப்பட உள்ளது.

மாநகராட்சியின் இந்த அறிவிப்புக்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும், கொரோனா விதிமுறைகளை பின்பற்றி காந்தி மார்க்கெட்டிலேயே விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து உள்ளனர்.