×

கல்லறை திருநாள் – முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்திய கிறிஸ்தவர்கள்

திருச்சி திருச்சி மாவட்டத்தில் கல்லறை திருநாளையொட்டி, கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களின் கல்லறைகளில் மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். கிறிஸ்தவ மக்கள், இறந்த தங்களது உறவினர்களை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2ஆம் தேதியை கல்லறை திருநாளாக அனுசரித்து வருகின்றனர். இந்நாளில் தங்களது உறவினர்கள், நண்பர்களின் கல்லறைகளுக்கு வர்ணம் பூசியும், மலர்களால் அலங்கரித்தும், மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு செய்வது வழக்கம். கொரோனா காரணமாக நடப்பு ஆண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து கல்லறை திருநாளை அனுசரிக்க மாவட்ட
 

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் கல்லறை திருநாளையொட்டி, கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களின் கல்லறைகளில் மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். கிறிஸ்தவ மக்கள், இறந்த தங்களது உறவினர்களை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2ஆம் தேதியை

கல்லறை திருநாளாக அனுசரித்து வருகின்றனர். இந்நாளில் தங்களது உறவினர்கள், நண்பர்களின் கல்லறைகளுக்கு வர்ணம் பூசியும், மலர்களால் அலங்கரித்தும், மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு செய்வது வழக்கம். கொரோனா காரணமாக நடப்பு ஆண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து கல்லறை திருநாளை அனுசரிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதனை

தொடர்ந்து, திருச்சி மேலப்புதூர் கல்லறை தோட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள் தங்களது உற்றார், உறவினர், டநண்பர்களின் கல்லறையில் மெழுகுவர்த்தி ஏற்றி, மனமுருகி பிரார்த்தனை செய்தனர். மேலும் கல்லறைத் திருநாளையொட்டி தேவாலயங்களில் இன்று காலை சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. இதனிடையே, கொரோனா காரணமாக கல்லறை வழிபாட்டில் மக்கள் கூட்டமின்றி காணப்பட்டது.