×

17 வயது சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது

திருச்சி திருச்சியில் 17 வயது சிறுமிக்கு 100 ரூபாய் சாக்லெட் வாங்கி கொடுத்து, அவரை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர். திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு, கடந்த 7ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரது தாயார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற நிலையில், பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் 3 மாத கர்ப்பமாக இருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து
 

திருச்சி

திருச்சியில் 17 வயது சிறுமிக்கு 100 ரூபாய் சாக்லெட் வாங்கி கொடுத்து, அவரை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர்.

திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு, கடந்த 7ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரது தாயார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற நிலையில், பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் 3 மாத கர்ப்பமாக இருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலின் பேரில், கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அச்சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

அதில் கடந்த 2018ஆம் ஆண்டு தான் 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது கோகுல கண்ணன் என்ற சக மாணவனுடன் நட்பு ஏற்பட்டு, பின்னர் தீவிரக்காதலாக மாறியதாகவும், இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் கோகுலகண்ணன் தனக்கு 100 ரூபாய் சாக்லேட் வாங்கிக் கொடுத்து, திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி எல்லை மீறியதாகவும், அதனால் கர்ப்பமடைந்ததாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து கோகுல கண்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவனை போலீசார் வலைவீசி தேடிவந்தனர். மேலும், அவர் பேசிய எண்களை தொடர்பு கொண்டபோது அவை பயன்பாட்டில் இல்லாதது தெரியவந்தது. இதனால் “க்ளு” கிடைக்காமல் திணறிய போலீசார், அவர்கள் படித்ததாக கூறப்பட்ட பள்ளிக்கு சென்று ஆவணங்களை சோதனை செய்ததில், கோகுல கண்ணன் என்ற பெயரில் யாரும் படிக்கவில்லை என உறுதியானது.

இதனால் போலீசாரின் சந்தேகம் சிறுமி மீது திரும்பிய நிலையில், அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தினர்.

அதில் தான் கூறிய அனைத்தும் பொய் என்றும் ஒப்புகொண்ட சிறுமி, தனது கர்ப்பத்திற்கு காரணம் தன்னுடன் 9 ஆம் வகுப்பு வரை படித்து விட்டு பாதியிலேயே நின்ற யுவராஜ் தான் எனக்கூறி போலீசாரின் பிபியை எகிற வைத்தாள். மேலும், 8ஆம் வகுப்பு படிக்கும்போதே யுவராஜ் தன்னிடம் காதலை தெரிவித்ததாகவும், ஆயினும் தான் அதனை நிராகரித்ததாகவும் பின்னர் யுவராஜ் தனக்கு அடிக்கடி 100 ரூபாய் டைரி மில்க் சாக்லேட் வாங்கி கொடுத்ததால், அவனது காதலை ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தாள்.
இதனையடுத்து யுவராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.