×

முகக் கவசம் அணியாததால் அபராதம் செலுத்திய டிக்டாக் பிரபலம்

திருச்சி சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் டிக்டாக்கில் நகைச்சுவை, நடனம், விழிப்புணர்வு உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர். இந்நிலையில் இன்று முகக் கவசம் அணியாமல் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதிக்கு சென்ற ரமேஷுக்கு, மாநகராட்சி ஊழியர்கள் 200 ரூபாய் அபராதம் விதித்தனர். அதனை செலுத்திய பின்னர் முகக் கவசம் அணியாததால், தான் அபராதம் செலுத்தியதாகவும் நம் பாதுகாப்புக்காக முககவசம் அணிய வேண்டும் என பேசி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ
 

திருச்சி சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் டிக்டாக்கில் நகைச்சுவை, நடனம், விழிப்புணர்வு உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர். இந்நிலையில் இன்று முகக் கவசம் அணியாமல் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதிக்கு சென்ற ரமேஷுக்கு, மாநகராட்சி ஊழியர்கள் 200 ரூபாய் அபராதம் விதித்தனர். அதனை செலுத்திய பின்னர் முகக் கவசம் அணியாததால், தான் அபராதம் செலுத்தியதாகவும் நம் பாதுகாப்புக்காக முககவசம் அணிய வேண்டும் என பேசி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வருகிறது.