×

திருச்சிக்கு மேலும் மூன்று 108 ஆம்புலன்ஸ் வாகனஙகள்

பொதுமக்களின் மருத்துவ சேவை மற்றும் அவசர தேவையை கருத்தில் கொண்டு தமிழக அரசால் புதிதாக வழங்கப்பட்ட மூன்று 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களின் மருத்துவ சேவை மற்றும் அவசரத் தேவையை கருத்தில் கொண்டு ஏற்கனவே திருச்சி மாவட்டத்தில் 36 இடங்களில் 108 இலவச அவசர ஊர்தி மூலம் மருத்துவ சேவையை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் இரண்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு
 

பொதுமக்களின் மருத்துவ சேவை மற்றும் அவசர தேவையை கருத்தில் கொண்டு தமிழக அரசால் புதிதாக வழங்கப்பட்ட மூன்று 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களின் மருத்துவ சேவை மற்றும் அவசரத் தேவையை கருத்தில் கொண்டு ஏற்கனவே திருச்சி மாவட்டத்தில் 36 இடங்களில் 108 இலவச அவசர ஊர்தி மூலம் மருத்துவ சேவையை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் இரண்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு தேவையான அனைத்து வசதிகள் கொண்ட வாகனமும் , இரண்டு பச்சிளம் குழந்தைகளுக்கு சிறப்பு வாகனமும் திருச்சி மற்றும் மணப்பாறை மருத்துவமனையில் செயல்படுகின்றன.

தமிழக அரசால் திருச்சி மாவட்டத்தில் காட்டுப்புத்தூர், துவாக்குடி, லால்குடி ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் 3 வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒரு அவசர சிகிச்சை பிரிவிற்கு தேவையானவை ஹிண்டி லேட்டர், இஃப்லேட்டர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கொண்ட வாகனமும், இரண்டு அடிப்படை வசதிகள் கொண்ட வாகனமும் வழங்கப்பட்டுள்ளது.