×

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

திருச்சி நிலப்பிரச்சினை தொடர்பாக கொலை மிரட்டல் விடுத்த திமுக ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே மூங்கில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவருக்கு பிரியா என்ற மனைவியும், ரித்திக் என்ற குழந்தையும் உள்ளனர். பழனிசாமி தனக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் வீடுகட்டி, விவசாயம் செய்து வருகிறார். இதனிடையே நிலம் தொடர்பாக பழனிசாமிக்கும், அவரது
 

திருச்சி

நிலப்பிரச்சினை தொடர்பாக கொலை மிரட்டல் விடுத்த திமுக ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே மூங்கில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவருக்கு பிரியா என்ற மனைவியும், ரித்திக் என்ற குழந்தையும் உள்ளனர்.

பழனிசாமி தனக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் வீடுகட்டி, விவசாயம் செய்து வருகிறார். இதனிடையே நிலம் தொடர்பாக பழனிசாமிக்கும், அவரது உறவினர்களுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக, அவர் முசிறி நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்து உள்ளார். இந்த நிலையில் நேற்று பழனிசாமி நிலத்திற்கு செல்லும் வழியில், பெரிய பள்ளிபாளையத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் என்பவர் தலைமையில் சிலர், ஜே.சி.பி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி உள்ளனர். இதுகுறித்து, கேட்ட பழனிச்சாமி மற்றும் அவரது மனைவியையும் தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் வந்த பழனிச்சாமி, திடீரென மூவர் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அருகாமையில் இருந்த பொதுமக்கள் உடனடியாக தடுத்து நிறுத்தி, மண்ணெண்ணையை பறித்தனர். அப்போது, தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், மிரட்டல் விடுத்த தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டுமென அவர்கள் கோரிக்கை வைத்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.