×

ஶ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா – பகல்பத்தின் 2ஆம் நாளில் முத்துசாய் கொண்டையில் அருள்பாலித்த நம்பெருமாள்…

திருச்சி ஶ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று நம்பெருமாள் முத்துசாய் கொண்டை, வைர அபயஹஸ்தம் உள்ளிட்ட ஆபரணங்கள் சூடி சேவை சாதித்தார். திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் ஆலயத்தில், வைகுண்ட ஏகாதசி திருவிழா, நேற்று முன்தினம் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. பகல்பத்து விழாவின் இரண்டாம் நாளான இன்று காலை நம்பெருமாள், முத்து சாய்கொண்டை அலங்காரத்துடன், வைர அபஹகஸ்தம், பவள மாலை, தங்கக்கிளி, பஞ்சாயுத பதக்கம், அரைஞான் ஆகிய ஆபரணங்கள் சூடியபடி
 

திருச்சி

ஶ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று நம்பெருமாள் முத்துசாய் கொண்டை, வைர அபயஹஸ்தம் உள்ளிட்ட ஆபரணங்கள் சூடி சேவை சாதித்தார். திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் ஆலயத்தில், வைகுண்ட ஏகாதசி திருவிழா, நேற்று முன்தினம் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.

பகல்பத்து விழாவின் இரண்டாம் நாளான இன்று காலை நம்பெருமாள், முத்து சாய்கொண்டை அலங்காரத்துடன், வைர அபஹகஸ்தம், பவள மாலை, தங்கக்கிளி, பஞ்சாயுத பதக்கம், அரைஞான் ஆகிய ஆபரணங்கள் சூடியபடி தங்கபல்லக்கில் தோளுக்கினியானில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, பிரகாரங்களின் வழியே வந்தபடி கண்ணாடி சேவை கண்டருளி.

தொடர்ந்து, அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாள், அரையர் சேவை எனப்படும் அபிநயம், வியாக்யானம், பெரியாழ்வார் திருமொழி கேட்டருளினார். தொடர்ந்து திருநடை உபயங்களை கண்டருள பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில், அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி நம்பெருமாள் பக்தர்களுக்கு பொதுஜன சேவை கண்டருளினார். திருவாபரணங்கள சூடியபடி அருள்பாலித்த வைகுண்டப்பெருமாளை ரெங்கா, ரெங்கா என பக்திகோஷமிட்டவாறு ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.