×

செந்தூர் ஃபின்கார்ப் நிதி நிறுவனத்தின் மோசடி! அதிகாரிகள் தலைமறைவு! திருச்சி ஆட்சியரிடம் மக்கள் புகார்!

பல கோடி ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் திருச்சி தில்லைநகர் பகுதியில் செந்தூர் ஃபின்கார்ப் என்கிற நிதி நிறுவனம் இயங்கியது. அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் தினமும் குறிப்பிட்ட தொகையும் ஒரு வருடத்திற்கு பிறகு முழுத்தொகையும் வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் 35 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர்.
 

பல கோடி ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார்

திருச்சி தில்லைநகர் பகுதியில் செந்தூர் ஃபின்கார்ப் என்கிற நிதி நிறுவனம் இயங்கியது. அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் தினமும் குறிப்பிட்ட தொகையும் ஒரு வருடத்திற்கு பிறகு முழுத்தொகையும் வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

அந்த நிறுவனத்தில் 35 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர். அப்படி முதலீடு செய்தவர்களுக்கு முதலீடு செய்த தொகைக்கு ஏற்ப 300 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை தினமும் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார்கள். பணம் செலுத்தியது முதல் 30 நாட்களுக்கு சரியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட பணம் 30 நாட்களுக்கு பின்பு வராமல் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள் அது குறித்து நிறுவனத்தின் அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு உரிய பதிலளிக்கப்படவில்லை.

சிறிது காலத்தில் அந்த நிறுவனத்தை கவனித்து வந்த முத்துராமலிங்கம், செந்தில் ஆகியோர் தலைமறைவாகி உள்ளனர். அவர்கள் குறித்து பலமுறை காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்ப கிடைக்காத 50க்கும் மேற்பட்டோர் இன்று திருச்சியில் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் மனு அளித்தனர். அதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்தனர்.

செந்தூர் நிதி நிறுவனத்தினர் பல கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர். அவர்களிடமிருந்து நாங்கள் செலுத்திய தொகையை திரும்ப பெற்று தர வேண்டும். மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.