×

சமயபுரம் தேர்த்திருவிழா – சப்பரத்தில் கோவில் பிரகாரத்தில் வலம் வந்த அம்மன்!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர்திருவிழாவையொட்டி, அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி கோவில் உள் பிரகாரத்தில் வலம் வந்தார். திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அரசின் கட்டுப்பாடுகளின் படி, சித்திரை திருவிழா கடந்த 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி, நாள்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காலை மற்றும் மாலை வேளைகளில் கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் வலம் வந்தார்.
 

திருச்சி

சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர்திருவிழாவையொட்டி, அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி கோவில் உள் பிரகாரத்தில் வலம் வந்தார்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அரசின் கட்டுப்பாடுகளின் படி, சித்திரை திருவிழா கடந்த 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவையொட்டி, நாள்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காலை மற்றும் மாலை வேளைகளில் கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் வலம் வந்தார். திருவிழாவின் 10ஆம் நாளான நேற்று நடைபெற வேண்டிய சித்திரை தேரோட்டத்திற்கு பதிலாக, அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

இந்த நிகழ்ச்சியில், பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், கோவில் அர்ச்சகர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர மட்டும் கலந்துகொண்டு சப்பரத்தை வடம்பிடிதது இழுத்து கோவில் பிரகாரத்தை வலம் வந்தனர். பக்தர்கள் வசதிக்காக தேரோட்ட நிகழ்ச்சி கோவில் நிர்வாகம் சாரபில் யூடிபில் நேரலையில் ஒளிபரப்பப் பட்டது.