×

ஸ்ரீரங்கம் அதிமுக கூட்டத்தில் ரகளை: 106 பேர் மீது வழக்கு

ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் மு.பரஞ்சோதி, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக கடந்த மாதம் புதியதாக நியமனம் செய்யப்பட்டார்.புதிய மாவட்ட செயலாளராக பரஞ்சோதி பொறுப்பேற்ற பின் அந்த மாவட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களையும், தனக்கு வேண்டியவர்களையும் கட்சிப் பதவியில் நியமனம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்நிலையில் திருச்சி அதிமுக மாவட்ட மீனவர் அணி செயலாளராக இருக்கும் கண்ணதாசன், எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் ஆவார்.இவர் தனக்கு அந்தநல்லூர் ஒன்றியத்தை இரண்டாக பிரிக்கும் போது தனக்கு ஒன்றிய செயலாளர்
 

ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் மு.பரஞ்சோதி, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக கடந்த மாதம் புதியதாக நியமனம் செய்யப்பட்டார்.
புதிய மாவட்ட செயலாளராக பரஞ்சோதி பொறுப்பேற்ற பின் அந்த மாவட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களையும், தனக்கு வேண்டியவர்களையும் கட்சிப் பதவியில் நியமனம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இந்நிலையில் திருச்சி அதிமுக மாவட்ட மீனவர் அணி செயலாளராக இருக்கும் கண்ணதாசன், எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் ஆவார்.
இவர் தனக்கு அந்தநல்லூர் ஒன்றியத்தை இரண்டாக பிரிக்கும் போது தனக்கு ஒன்றிய செயலாளர் பதவி வேண்டும் என மேலிடத்தை வற்புறுத்தி வந்த நிலையில்,

ஓபிஎஸ் ஆதரவாளரான மாவட்ட செயலாளர் பரஞ்சோதி வேறு ஒருவருக்கு ஒன்றிய செயலாளர் பதவியை வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று ஸ்ரீரங்கத்தில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளாரும், ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் மு.பரஞ்சோதி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் வளர்மதி, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் பதவி கிடைக்காத எடப்பாடி ஆதரவாளரும், அதிமுக மாவட்ட மீனவர் அணி செயலாளருமான கண்ணதாசனின் ஆதரவாளர்கள் கூட்டத்தில் ரகளையில் ஈடுபட்டு, அங்குள்ள சேர் மற்றும் எம்ஜிஆர் – ஜெயலலிதா உருவப் படங்களை அடித்து தூக்கி எறிந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக தொண்டர்கள் கூட்ட மண்டபத்தில் இருந்து உயிர் தப்பி ஓடினர்.

ஜெயலலிதாவின் கோட்டையான ஸ்ரீரங்கம் தொகுதியில், அதிமுகவினரிடையே கோஷ்டி பூசல், மோதலாக உருவானது ஸ்ரீரங்கம் தொகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அதிமுகவினர் மீது அதிருப்தியும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் ஸ்ரீரங்கத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் ரகளையில் ஈடுபட்ட அதிமுக மீனவர் அணி மாவட்ட செயலாளர் கண்ணதாசன், திலிப், சதீஷ், அன்பு, சுகுமாறன் உள்ளிட்ட எடப்பாடி பழனிச்சாமி அணியைச் சேர்ந்த 106 பேர் மீது ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் ஆதரவாளரான மாவட்டச் செயலாளர், எடப்பாடி ஆதரவாளரான ஒருவருக்கு ஒன்றியச் செயலாளர் பதவி தராதது திருச்சி மாவட்டத்தில் அக் கட்சியினர் இடையே பெரும் கோஷ்டி பூசல் உருவாகி, அது தொடர்வது கட்சிக்குள் சலசலப்பை அதிகப்படுத்திக்கொண்டே வருகிறது.