×

காணாமல்போன குழந்தைகளை மீட்கும் “ஆபரேஷன் ஸ்மைல்”… திருச்சி ரயில்வே போலீஸ் அதிரடி…

திருச்சி காணாமல் போன குழந்தைகளை மீட்க திருச்சியில் 30 இடங்களில் உதவி மையம் அமைக்கப்படும் என ரயில்வே காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார். திருச்சி ரயில்வே ஜங்சனில், ரயில்வே காவல்துறை சார்பில் காணாமல் போன மற்றும் பெற்றோரை பிரிந்த குழந்தைகளை மீட்கும் விதமாக ஆபரேஷன் ஸ்மைல் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இதில் மாவட்ட ரயில்வே எஸ்.பி., செந்தில்குமார், குழந்தைகள் நல குழு தலைவர் கமலா, ரயில்வே சைல்டு லைன் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரேவதி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த
 

திருச்சி

காணாமல் போன குழந்தைகளை மீட்க திருச்சியில் 30 இடங்களில் உதவி மையம் அமைக்கப்படும் என ரயில்வே காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.

திருச்சி ரயில்வே ஜங்சனில், ரயில்வே காவல்துறை சார்பில் காணாமல் போன மற்றும் பெற்றோரை பிரிந்த குழந்தைகளை மீட்கும் விதமாக ஆபரேஷன் ஸ்மைல் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இதில் மாவட்ட ரயில்வே எஸ்.பி., செந்தில்குமார், குழந்தைகள் நல குழு தலைவர் கமலா, ரயில்வே சைல்டு லைன் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரேவதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய ரயில்வே எஸ்.பி செந்தில்குமார், காணாமல் போன குழந்தைகள் மீட்புக்காக திருச்சி ரயில்வே மாட்டத்தில் 24 காவல் நிலையங்கள் மற்றும் 6 புறக்காவல் நிலையங்களில் உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

இந்த மையங்களில், பெற்றோருடன் சண்டையிட்டு வரும் குழந்தைகள் மற்றும் காணாமல் போன குழந்தைகளை மீட்டு கவுன்சிலிங் அளித்து, பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும், ரயிலில் அழைத்து வரப்படும் குழந்தை தொழிலாளர்களை மீட்டு பாதுகாப்பு மற்றும் கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்.பி. செந்தில்குமார் தெரிவித்தார்.