×

திருச்சியில் வடமாநில தொழிலதிபர் வீட்டில் வருமான வரி சோதனை

திருச்சி திருச்சியில் வடமாநில தொழிலதிபர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. திருச்சி பெரிய கம்மாளதெரு அருகே நடுகல்லுகார தெருவில் வசிப்பவர் ஸ்ரீபால். வடமாநில தொழிலதிபரான இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குட்கா விற்பனை தொடர்பான வழக்கில் போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். இந்த நிலையில், அவர் கடந்த சில மாதங்களாக பெங்களூரை தலைமையிடமாக கொண்டு குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். அதற்காக உரிய முறையில் வருமான வரி
 

திருச்சி

திருச்சியில் வடமாநில தொழிலதிபர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. திருச்சி பெரிய கம்மாளதெரு அருகே நடுகல்லுகார தெருவில் வசிப்பவர் ஸ்ரீபால். வடமாநில தொழிலதிபரான இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குட்கா விற்பனை தொடர்பான வழக்கில் போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். இந்த நிலையில், அவர் கடந்த சில மாதங்களாக பெங்களூரை தலைமையிடமாக கொண்டு குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அதற்காக உரிய முறையில் வருமான வரி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் பெங்களூரில் உள்ள அவரது நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று திருச்சியில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதனையொட்டி, நடுக்கல்லுக்கார தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு வந்த 5 அதிகாரிகள், தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.