×

ஊழியருக்கு சம்பளம் வழங்காத கியாஸ் ஏஜென்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

திருச்சி தொழிலாளர்களை வஞ்சிக்கும் கியாஸ் சிலிண்டர் ஏஜென்சி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் 23ஆம் தேதி தேனியில் ஆர்ப்பாட்டம்நடத்த உள்ளதாக எல்.பி.ஜி சிலிண்டர் டெலிவரி மேன் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த சங்கத்தின் நிர்வாகிகள், தேனியில் உள்ள தனியார் கேஸ் ஏஜென்சியில் ஊழியர்களுக்கு சரிவர ஊதியம் வழங்காததால், ஒருவர் விஷம் அருந்தியதாகவும், இதனையடுத்து ஊழியர்களுக்கு சம்பளத்தை எண்ணெய் நிறுவனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும்,
 

திருச்சி

தொழிலாளர்களை வஞ்சிக்கும் கியாஸ் சிலிண்டர் ஏஜென்சி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் 23ஆம் தேதி தேனியில் ஆர்ப்பாட்டம்
நடத்த உள்ளதாக எல்.பி.ஜி சிலிண்டர் டெலிவரி மேன் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த சங்கத்தின் நிர்வாகிகள், தேனியில் உள்ள தனியார் கேஸ் ஏஜென்சியில் ஊழியர்களுக்கு சரிவர ஊதியம் வழங்காததால், ஒருவர் விஷம் அருந்தியதாகவும், இதனையடுத்து ஊழியர்களுக்கு சம்பளத்தை எண்ணெய் நிறுவனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், குறிப்பிட்ட கியாஸ் சிலிண்டர் ஏஜென்சி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கவும், அவர்களுக்கான சம்பளத்தை வழங்கிட வலியுறுத்தியும் வரும் 23-ஆம் தேதி தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனுஅளிக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.