×

மகப்பேறு சிகிச்சை – திருச்சி அரசு மருத்துவமனைக்கு விருது

திருச்சி மகப்பேறு சிகிச்சை பிரிவில், சிறப்பான செயல்பாட்டிற்கான விருது, திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கிடைத்துள்ளதாக, மருத்துவமனை முதல்வர் வனிதா தெரிவித்தார். இதுதொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வனிதா, நடப்பு ஆண்டு குழந்தைகள் சிகிச்சை பிரிவில் 10 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், இதில், ஆயிரம் குழந்தைகளுக்கு வென்டிலேட்டர் மூலம் தொடர் சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றியதாகவும் தெரிவித்தார். அதேபோல் கொரோனா உறுதியான 325 கர்ப்பிணி பெண்களுக்கு நடந்த பிரசவத்தில், 10 குழந்தைகளுக்கு மட்டுமே பாதிப்பு இருந்ததாகவும், அவர்களும்
 

திருச்சி

மகப்பேறு சிகிச்சை பிரிவில், சிறப்பான செயல்பாட்டிற்கான விருது, திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கிடைத்துள்ளதாக, மருத்துவமனை முதல்வர் வனிதா தெரிவித்தார். இதுதொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வனிதா, நடப்பு ஆண்டு குழந்தைகள் சிகிச்சை பிரிவில் 10 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், இதில், ஆயிரம் குழந்தைகளுக்கு வென்டிலேட்டர் மூலம் தொடர் சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றியதாகவும் தெரிவித்தார்.

அதேபோல் கொரோனா உறுதியான 325 கர்ப்பிணி பெண்களுக்கு நடந்த பிரசவத்தில், 10 குழந்தைகளுக்கு மட்டுமே பாதிப்பு இருந்ததாகவும், அவர்களும் சிகிச்சைக்கு பின் நலமடைந்ததாகவும் தெரிவித்தார். மற்ற மாவட்டங்களை விட சிறப்பான முறையில் சிகிச்சை அளித்ததன் மூலமாக, தமிழக முதலமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியார், திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு விருது வழங்கி கவுரவித்ததாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், திருச்சி மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பை மூன்று இலக்க எண்ணில் இருந்து ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.